வால்பாறை நகராட்சியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை


வால்பாறை நகராட்சியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 31 May 2021 6:15 AM IST (Updated: 31 May 2021 6:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை நகராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையில், துப்புரவு அதிகாரி செல்வராஜ் மேற்பார்வையில் வால்பாறை நகரில் உள்ள அனைத்து கடைகள், ஏ.டி.எம். மையங்கள், மருந்து கடைகள் மற்றும் நடமாடும் ஏ.டி.எம். வாகனத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.

 அப்போது கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை சிகிச்சை மையத்தில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.



Next Story