மாவட்ட செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள் + "||" + Tamimun Ansari appeals to MK Stalin to release lifers before Karunanidhi's birthday

கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
கருணாநிதி பிறந்தநாளன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, தமிமுன் அன்சாரி வேண்டுகோள்.
சென்னை,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாள், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. புதிதாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற ஜூன் 3-ந்தேதியன்று ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வதாக அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆட்சிக்கு அது மேலும் சிறப்பு சேர்க்கும்.


சிறை தண்டனையின் நோக்கமே ஒருவரை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் வாழச் செய்வதே ஆகும். அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் எஞ்சிய கால வாழ்வில் வசந்தம் ஏற்படவும், அவர்களது குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படவும் முதல்-அமைச்சர் கருணை உள்ளத்தோடு நல்லதொரு அறிவிப்பை வெளியிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சுய உதவிக்குழு கடன்களை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
சுயஉதவி குழுக்களுக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நுண்கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. உயிரிழப்புகள் அதிகரிப்பது வேதனை தருகிறது கொரோனா தொற்று பரவலை குறைக்க உடனடி நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
உயிரிழப்புகள் அதிகரிப்பது வேதனை தருகிறது என்றும், கொரோனா தொற்று பரவலை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு வேண்டுகோள்
ஊரடங்கு காலத்தில் வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. வாடகை வாகன ஓட்டுனர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு அவகாசம் தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்
ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் வாடகை வாகன ஓட்டுனர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு அவகாசம் தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்.