மாவட்ட செய்திகள்

காரில் மது விற்றவர் கைது + "||" + Arrest of liquor dealer in car

காரில் மது விற்றவர் கைது

காரில் மது விற்றவர் கைது
தூத்துக்குடியில் காரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்போது, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில், அதே பகுதியை சேர்ந்த கற்குவேல் மகன் சரவணக்குமார் (வயது 40) என்பவர் காரில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 165 மதுபாட்டில்களையும், மது விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
2. பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரிக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,133 மதுபாட்டில்கள் பறிமுதல் 4 பேர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 133 மதுபாட்டில்களை சேலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1680 மதுபாட்டில்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து மினி லாரியில் தக்காளிப்பழ பெட்டிகளுக்கு அடியில் வைத்து கடத்தி வரப்பட்ட 1,680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
4. பெங்களூருவில் இருந்து லாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே கடத்திவரப்பட்ட 3900 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பெங்களூருவில் இருந்து லாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 3,900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
5. 40 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.