திருச்செந்தூர் அருகே காயாமொழி குளத்தை அளவிடும் பணி தீவிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு


திருச்செந்தூர் அருகே காயாமொழி குளத்தை அளவிடும் பணி தீவிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 4:12 PM GMT (Updated: 31 May 2021 4:12 PM GMT)

திருச்செந்தூர் அருகே காயாமொழி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப்படுத்துவதற்காக அளவிடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர், ஜூன்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தும் பணிக்காக அளவிடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

காயாமொழி குளம்

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள குளத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காயாமொழி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப்படுத்தும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வேயர்கள் மூலம் அளவிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காயாமொழிக்கு நேரில் வந்து குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துவது குறித்தும், கரையை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வேல், கிராம நிர்வாக அலுவலர் தனசேகர், சர்வேயர்கள் முருகேசன், ஜெயசுதா, முத்தமிழ், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story