மாவட்ட செய்திகள்

4 மாதங்களில் 15 பசுக்கள் சாவு + "||" + cows dead

4 மாதங்களில் 15 பசுக்கள் சாவு

4 மாதங்களில் 15 பசுக்கள் சாவு
கொள்ளிடம் அருகே குப்பைகளை தின்று கடந்த 4 மாதங்களில் 15 பசுக்கள் உயிரிழந்து உள்ளன.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே குப்பைகளை தின்று கடந்த 4 மாதங்களில் 15 பசுக்கள் உயிரிழந்து உள்ளன. 
குப்பைகள் 
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே ெரயில்வே பாலம் உள்ளது. இதன் அருகே சந்தப்படுகை கிராமம் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையோரம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குப்பைகள் ஊராட்சி சார்பில் தினமும் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றன. இதில் பாலித்தீன் பைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய காய்கறிகள், இறந்த நாய், பூனை உள்ளிட்ட விலங்கினங்கள் கொட்டப்படுகின்றன. 
15 பசுமாடுகள் சாவு
இப்பகுதியில் சந்தப் படுகை மற்றும் திட்டுபடுகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தினமும் மேய்ச்சலுக்காக வந்து செல்கின்றன. அப்போது குப்பையில் கொட்டப்பட்டு உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த சில பொருட்களை கால்நடைகள் தின்று விடுகின்றன. இதனால் கால்நடைகள் உயிரிழந்து விடுகிறது.  கடந்த 4 மாதங்களில் மட்டும் சந்தப்படுகை கிராமத்தைச் சேர்ந்த 15 பசு மாடுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தின்று இறந்துள்ளன. 
ரூ.40 ஆயிரம்
நேற்று சந்தபடுகை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் சினை பசுமாடு அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த போது குப்பையை தின்று இறந்தது. இதன் மதிப்பு ரூ.40ஆயிரம் என கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே கால்நடைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.