மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டம் + "||" + Struggle

கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டம்

கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டம்
புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை, ஜூன்.1-
புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் நேற்று காலை கொரோனா வார்டு முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், உணவுகள் தரமானதாக வினியோகிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் நோயாளிகளின் உதவியாளர்களாக இருந்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அவர்களது போராட்டம் தொற்றை அதிகரிக்க கூடிய வகையில் இருந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி குன்னம் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
4. கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு; இரும்புக்கதவை மூடி போராட்டம்
கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து இரும்புக்கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. களக்காட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
களக்காட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.