வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 31 May 2021 11:09 PM IST (Updated: 31 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அன்னவாசல், ஜூன்.1-
அன்னவாசல் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 23). இவருக்கும், இவரது உறவினர் பெண் ஒருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு ஒருநாள் முன்னதாக கடம்பராயன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற சேதுராமன் அந்த பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வினோத்குமாருக்கும், சேதுராமனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கடம்பராயன்பட்டியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு  சேதுராமன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வினோத்குமார் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் சேதுராமனுக்கு தலை, தோள்பட்டையில் வெட்டு விழுந்தது மட்டுமின்றி கைவிரல் துண்டானது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சேதுராமனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story