தடுப்பூசி போட வந்தவர்கள் கொரோனாவை விலைக்கு வாங்கி விடுவார்களோ?


தடுப்பூசி போட வந்தவர்கள் கொரோனாவை விலைக்கு வாங்கி விடுவார்களோ?
x
தினத்தந்தி 31 May 2021 11:09 PM IST (Updated: 31 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே சமூக இடைவெளியை பின்பற்றாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் கொரோனாவை விலைக்கு வாங்கி விடுவார்களோ? என சுகாதாரத்துறையினர் அச்சம் அடைந்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே சமூக இடைவெளியை பின்பற்றாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் கொரோனாவை விலைக்கு வாங்கி விடுவார்களோ? என சுகாதாரத்துறையினர் அச்சம் அடைந்தனர்.

கொரோனா 2-வது அலை

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதையொட்டி தினந்தோறும் ஏராளமானோர் அதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், பலர் பலியாகியும் வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியது.
அப்போது பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஒரு வித தயக்க உணர்வோடு இருந்து வந்தனர்..இந்நிலையில் தற்போது கொரோனாவின் 2-வது அலை மிக மோசமாக உள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு இடமில்லாமல் மருத்துவமனைகளில் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அலைமோதிய கூட்டம்

சிவகங்கை மாவட்டத்திலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இருப்பினும் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் டோக்கன் முறை அனுமதிக்கப்பட்டு அவர்களை போதிய சமூக இடைவெளியில் நிற்க அறிவுறுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காரைக்குடி பகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் ெபாதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு நின்றனர். இதை பார்த்த சுகாதாரத்துறையினர் கலக்கம் அடைந்தனர்.
கொரோனாவை வாங்கி விடுவார்களா?
கொரோனா தடுப்பூசி போட வந்த மக்கள் தாங்கள் முககவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இப்படி ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு நின்றதால் எங்கே கொரோனாவை விலைக்கு வாங்கி சென்று விடுவார்களோ என சுகாதாரத்துறையினர் கலக்கத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். பின்னர் டோக்கன் விதிமுறைப்படி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் இடத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற பொதுமக்கள் முன் வர ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story