குளித்தலை அருகே வளைவான சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகள்


குளித்தலை அருகே வளைவான சாலையில் அடிக்கடி நடக்கும்   விபத்துகள்
x
தினத்தந்தி 31 May 2021 5:50 PM GMT (Updated: 31 May 2021 5:50 PM GMT)

குளித்தலை அருகே வளைவான சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை 
வளைவான சாலை
குளித்தலை அருகே தேசியமங்கலம் பகுதியில் உள்ள குளித்தலை - மணப்பாறை சாலையில் பெரிய வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவான சாலையை இரண்டாக பிரிக்கும் வகையில் சாலையின் நடுவில் கான்கிரீட்டிலான தடுப்புகள் நெடுஞ்சாலைத்துறைமூலம் அமைக்கப்பட்டன. கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்ட இந்த வளைவான சாலை பகுதி உள்ள இடத்தில் தெருவிளக்குகள் இல்லை.
இதன் காரணமாக இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. அதுபோல சாலையின் நடுவில் உள்ள தடுப்பு உள்ள இடத்தை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளி எதிரொளிக்கும் கருவிகளோ, அபாய போர்டுகளோ பொருத்தப்படவில்லை.
அடிக்கடி விபத்து
மேலும் இச்சாலையில் வளைவான இடத்தில் இருந்து மட்டும் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால். இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் பல வாகனங்கள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையின் நடுவில் உள்ள தடுப்பை விரிவாக்கம் செய்து அமைக்கவேண்டும்.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
 சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளி எதிரொளிக்கும் கருவியோ அல்லது ஒளி எதிரொளிக்கும் ஸ்டிக்கர்களையே பொருத்தவேண்டும். 
மேலும் போதுமான வெளிச்சம் வரும் வகையில் சாலையோரம் மின் விளக்குகள் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story