மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையம் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + girl suicide

பள்ளிபாளையம் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தை அடுத்த விளாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி. சைக்கிளில் டீ விற்று வருகிறார். இவருடைய மனைவி பாண்டி மீனா. இந்த தம்பதிக்கு 5 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவர்களின் 3-வது மகள் சங்கரி (வயது 16). சம்பவத்தன்று பாண்டி மீனா, சங்கரியை வீட்டு வேலை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சங்கரி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி சங்கரி நேற்று பலியானார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.