மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + suicide

நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
தச்சு தொழிலாளி
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). தச்சு தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி அங்குள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு சென்று மது குடித்து விட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சைக்கிளில் தனியாக சென்ற பாலகிருஷ்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையில் பெருமாள் கோவில் கரடு பகுதியில் உள்ள வேப்ப மரம் ஒன்றில் பாலகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலகிருஷ்ணனின் மகன் தனசேகர் (21) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.