மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கை மீறியதாக 201 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + Curfew

கொரோனா ஊரடங்கை மீறியதாக 201 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனா ஊரடங்கை மீறியதாக 201 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா ஊரடங்கை மீறியதாக 201 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. 
அந்தவகையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 147 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.29 ஆயிரத்து 400், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 28 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.14 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
2 பேர் கைது
மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 24 வழக்குகள் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது விற்றதாக 2 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 201 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஆந்திராவில் ஜுன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
2. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஊரடங்கு காரணமாக நாளை முதல் தரிசன நேரம் மாற்றம்
ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை முதல் 3 மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட வாகன ஓட்டிகள்
ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் வலம் வருகின்றனர்.
4. கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
5. ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கைத்தொழில்களில் ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள்
ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள், கைத்தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.