போலீசார் தீவிர கண்காணிப்பு


போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 12:04 AM IST (Updated: 1 Jun 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தீவிர கண்காணிப்பு

கீழக்கரை
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிலர் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிகின்றனர். இதனை கண்காணிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் டிரோன் கேமரா பறக்கவிடப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் கீழக்கரை முக்கு ரோடு, கடற்கரை கலங்கரை விளக்கம், 500 பிளாட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமரா பறக்கவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story