தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்


தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 1 Jun 2021 12:51 AM IST (Updated: 1 Jun 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்,
மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம் 
 இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
காரியாபட்டி சிவகாசி கோட்ட கலால் அலுவலர் தனக்குமார், காரியாபட்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். காரியாபட்டி தாசில்தாராக உள்ள சந்திரசேகரன், சிவகாசி கோட்ட கலால் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், காரியாபட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சுழி
 காரியாபட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்வேல், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன், திருச்சுழி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 மதுரை-தூத்துக்குடி இருவழி ெரயில் பாதைத்திட்ட நில எடுப்பு தனி தாசில்தார் செந்திவேல், விருதுநகர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் சிவஜோதி, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பறக்கும் படை தாசில்தார் 
 சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தாராக பணியாற்றிவரும் லோகநாதன், மதுரை - தூத்துக்குடி இருவழி ெரயில் பாதை திட்ட நில எடுப்பு தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சிவகாசி தாசில்தாராக பணியாற்றும் ராமசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் பறக்கும் படை தாசில்தார் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
 மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பிரிவின் பறக்கும் படை தாசில்தார் ஆக பணியாற்றும் ராஜகுமார், சிவகாசி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராக உள்ள தனராஜ், வெம்பக்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் 
சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தார் கந்தவேல்குமார், கலெக்டர் அலுவலக அகதிகள் பிரிவு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். 
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன் ராஜபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்டவாறு பணியிட மாற்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story