திறக்கப்பட்ட 2 மளிகை கடைகளுக்கு ‘சீல்'


திறக்கப்பட்ட 2 மளிகை கடைகளுக்கு ‘சீல்
x
தினத்தந்தி 31 May 2021 8:04 PM GMT (Updated: 31 May 2021 8:04 PM GMT)

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட 2 மளிகை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பெரம்பலூர்:

வாகனங்கள் மூலம் விற்பனை
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை திறக்க அனுமதி கிடையாது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மளிகை கடைகளுக்கு ‘சீல்’
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசல் தெருவில் நேற்று காலையில் மளிகை கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடந்ததாக நகராட்சி ஆணையருக்கு புகார் சென்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆணையர் குமரிமன்னன் விரைந்து சென்றார்.
அப்போது அவர், அந்த பகுதியில் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்த 2 மளிகை கடைகளை பூட்டி ‘சீல்' வைக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் பூட்டி ‘சீல்’ வைத்து, அபராதம் விதித்தனர்.

Next Story