மாவட்ட செய்திகள்

பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன + "||" + 6 electric poles tilted due to heavy rain with strong winds

பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன

பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன
விக்கிரமங்கலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன.
விக்கிரமங்கலம்:

மின்கம்பங்கள் சாய்ந்தன
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் கிராமத்திற்கும், அருள்மொழி கிராமத்திற்கும் இடையே சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. நிலங்களில் தற்போது விவசாயிகள் நெற்பயிர் நடவு பணி செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பெய்த காற்றுடன் கூடிய மழையில் விவசாய நிலங்களுக்கு இடையே சென்ற 6 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக தா.பழூர் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அசம்பாவிதம் தவிர்ப்பு
இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மின்சார ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை-ராமேசுவரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்
மதுரை-ராமேசுவரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தண்டவாளத்தின் இருபுறமும் மின்கம்பங்கள் நடப்பட்டன.