மாவட்ட செய்திகள்

விக்கிரமசிங்கபுரம் அருகே 2-வது நாளாக சிறுத்தை அட்டகாசம் + "||" + On the 2nd day near Wickramasinghapuram, a leopard was bitten by a goat again.

விக்கிரமசிங்கபுரம் அருகே 2-வது நாளாக சிறுத்தை அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம் அருகே 2-வது நாளாக சிறுத்தை அட்டகாசம்
விக்கிரமசிங்கபுரம் அருகே 2-வது நாளாக அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை மீண்டும் ஆட்டை கடித்து கொன்றது.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரத்தில் நேற்று முன்தினம் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த ஒரு ஆட்டை அடித்துக் கொன்றது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே மணிமுத்தாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல ஏர்மாள்புரத்தில் முத்துராமன் (வயது 46) என்பவரது வீட்டு வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த ஆட்டை கடித்து கொன்றது. ஆடு கத்தும் சத்தம் ேகட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தவுடன், ஆட்டை போட்டு விட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி விட்டது.

விக்கிரமசிங்கபுரம் அருகே 2-வது நாளாக சிறுத்தை ஆட்டை கடித்து கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.