மாவட்ட செய்திகள்

சென்னிமலையில்320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்;அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் வழங்கினர் + "||" + Relief items

சென்னிமலையில்320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்;அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் வழங்கினர்

சென்னிமலையில்320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்;அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் வழங்கினர்
சென்னிமலையில் 320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.
சென்னிமலை,
சென்னிமலையில் 320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வழங்கினர். 
நிவாரண  பொருட்கள்
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார்.
 ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், சென்னிமலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் வழங்கினர்
நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் பணிபுரியும் 70 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 320 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். 
இதில் சென்னிமலை ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் பி.செங்கோட்டையன், எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இளமதி அர்ச்சுணன், கொடுமணல் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுசீலா, ஜோதி பாக்கியம், ஊராட்சி தலைவர் பி.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
இதையொட்டி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முன்கள பணியாளர்கள் என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
பின்னர் சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். 
அப்போது அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சை மற்றும் வழங்கப்படும் உணவு குறித்து மருத்துவ பணியாளர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
2. முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
இளையான்குடி பகுதியில் முன்கள பணியாளர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. நிவாரண பொருட்களை வழங்கினார்.
3. ஓட்டப்பிடாரம் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்
ஓட்டப்பிடாரம் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.
4. ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
5. செவிலியர்களுக்கு நிவாரண பொருட்கள்
செவிலியர்களுக்கு நிவாரண பொருட்கள்-தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்