தபால் நிலையங்களில் தங்க பத்திர விற்பனை


தபால் நிலையங்களில் தங்க பத்திர விற்பனை
x
தினத்தந்தி 31 May 2021 8:43 PM GMT (Updated: 31 May 2021 8:43 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தபால் நிலையங்களில் தங்க பத்திர விற்பனை நேற்று தொடங்கியது.

நெல்லை:
இந்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தற்போது தங்க பத்திர விற்பனை நேற்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தனிநபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம். நேற்று முதல் வருகிற 4-ந்தேதி வரையிலான ஒரு கிராம் தங்க விற்பனை தொகை ரூ.4,889 ஆகும்.

தங்க பத்திரம் பெற விரும்புகிறவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றை கொண்டு தங்க பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை தபால்துறை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

Next Story