கொடைக்கானலில் தங்கியிருந்த 10 பேர் கைது


கொடைக்கானலில் தங்கியிருந்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 9:07 PM GMT (Updated: 31 May 2021 9:07 PM GMT)

கொடைக்கானலில் அனுமதியின்றி தங்கியிருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்: 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது. 

ஆனால் தடையை மீறி கொடைக்கானலுக்கு பலர் வாகனங்களில் வந்து வனப்பகுதியில் சுற்றி திரிவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது வடகவுஞ்சியை அடுத்த சோலைப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சிலர் அனுமதியின்றி தங்கியிருந்து டிரெக்கிங் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தங்கியிருந்த 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


மேலும் நகர் பகுதியில் நேற்று தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 15 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 


Next Story