சேலம்- சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை
சேலம்- சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
ஓமலூர்:
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம்- சென்னை இடையே கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 23-ந் தேதி மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மேலும் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களும் கொரோனா அச்சம் காரணமாக தங்களது முன்பதிவை ரத்து செய்தனர். இதன் காரணமாக நேற்று வரை சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை வழக்கமான கால அட்டவணையில் இயங்கும் என விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story