சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,157 பேர் பாதிப்பு 19 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,157 பேர் பாதிப்பு 19 பேர் பலி
x
தினத்தந்தி 1 Jun 2021 4:21 AM IST (Updated: 1 Jun 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,157 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,157 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,295 பேருக்கு ெதாற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,157 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் 250 பேர், எடப்பாடியில் 63 பேர், சங்ககிரியில் 54 பேர், ஆத்தூரில் 50 பேர், வீரபாண்டியில் 47 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 40 பேர், கெங்கவல்லி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 38 பேர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 30, தாரமங்கலத்தில் 28 பேர், தலைவாசல், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 25 பேர், மகுடஞ்சாவடியில் 22 பேர், சேலம் ஒன்றியத்தில் 19 பேர், காடையாம்பட்டியில் 16 பேர், கொங்கணாபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 15 பேர், கொளத்தூரில் 14 பேர், ஓமலூரில் 12 பேர், மேச்சேரியில் 7 பேர், நரசிங்கபுரத்தில் 6 பேர், ஏற்காட்டில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
65 ஆயிரத்தை தாண்டியது
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வந்த பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 67 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 54 பேர், கரூரில் இருந்து வந்த 49 பேர், திருச்சியில் இருந்து வந்த 45 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 37 பேர், கோவையில் இருந்து வந்த 31 பேர், சென்னையில் இருந்து வந்த 27 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.
19 பேர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 852 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 8 ஆயிரத்து 385 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.

Next Story