சேலத்தில் 6 முயல்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பிய நபருக்கு வலைவீச்சு


சேலத்தில் 6 முயல்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பிய நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 May 2021 11:14 PM GMT (Updated: 31 May 2021 11:14 PM GMT)

சேலத்தில் 6 முயல்களை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பிய நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்:
சேலத்தில் 6 முயல்களை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பிய நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாகன சோதனை
சேலம் வீராணம் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மூங்கில் குத்து பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் ஒரு வாலிபரின் கையில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது. 
போலீசை கண்டதும் அவர்கள்  தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கினர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து கொண்டு, நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
கைது
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் போலீசில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் குமார் (வயது 24) என்பதும், ஏற்காடு மலை அடிவாரப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி மூலம் முயல் வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. 
மேலும் அவரிடம் வேட்டையாடப்பட்ட 6 முயல்கள் இருந்தன. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story