சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


சேலம்  மாவட்டத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 11:32 PM GMT (Updated: 31 May 2021 11:32 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதற்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அதிகம் பேர் வருகின்றனர். இதனிடையே கடந்த ஒரு வாரமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது..
3½ லட்சம் பேர்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
இதனிடையே மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 450 கோவேக்சின், 7 ஆயிரத்து 330 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் மேலும் தடுப்பூசி மருந்துகள் சேலத்துக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

Next Story