தீவட்டிப்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ரோட்டில் சிதறிய தக்காளி


தீவட்டிப்பட்டி அருகே  சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ரோட்டில் சிதறிய தக்காளி
x
தினத்தந்தி 1 Jun 2021 5:13 AM IST (Updated: 1 Jun 2021 5:13 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், ரோட்டில் தக்காளிகள் சிதறி கிடந்தன.

ஓமலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்தது. ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி வைரன்காடு அருகே அந்த சரக்கு வாகனம் வந்த போது, அதன் ராடு துண்டாகி, பின்புற சக்கரம் கழன்றதாக தெரிகிறது. இதனால் வாகனம் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தக்காளி ரோடு முழுவதும் சிதறிக் கிடந்தது. விபத்தில் காயமடைந்த சரக்கு வாகனத்தின் டிரைவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story