மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில் தீவிர வாகன சோதனை + "||" + Intensive vehicle inspection in Kotagiri

கோத்தகிரியில் தீவிர வாகன சோதனை

கோத்தகிரியில் தீவிர வாகன சோதனை
கோத்தகிரியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் அவசியமின்றி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கோத்தகிரி

கோத்தகிரியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் அவசியமின்றி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்க்ள வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் கோத்தகிரி பகுதியில் முழு ஊரடங்கிலும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. அதில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

எச்சரிக்கை

அப்போது அவர்கள் தடுப்பூசி போட செல்கிறோம், மருந்து வாங்க செல்கிறோம் உள்பட பல்வேறு மருத்துவ காரணங்களை சொல்லி போலீசாரை கடந்து செல்கின்றனர். மருத்துவ தேவை என்பதால் அவர்களை தடுக்க முடியாத நிலையில் போலீசார் தவித்தனர்.

எனினும் முறையான காரணங்கள் தெரிவிக்காமல் அவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதையொட்டி கோத்தகிரியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், மனோகரன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் பலனாக மதியத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து குறைந்தது.