மாவட்ட செய்திகள்

ஊட்டியில் பலத்த மழை + "||" + Heavy rain in Ooty

ஊட்டியில் பலத்த மழை

ஊட்டியில் பலத்த மழை
ஊட்டியில் பலத்த மழை
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலையில் இருந்தே வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரம் பலத்த மழையாக பெய்தது.

இதனால் ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். மருந்து, மாத்திரைகள், பால் வாங்க வந்தவர்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். 

ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 26 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டியில் பலத்த மழை
ஊட்டியில் பலத்த மழை பெய்தது.
2. ஊட்டியில் பலத்த மழை
ஊட்டியில் பெய்த பலத்த மழையால் 5 ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்தன.