போக்குவரத்து நெரிசல் நீடித்தால் மும்பையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்; உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
போக்குவரத்து நெரிசல் நீடித்தால் மும்பையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.
மெட்ரோ சோதனை ஓட்டம்
மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பை பாந்திராவில் நடந்த விழாவில் ஆரேகாலனி- தகானுகர்வாடி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
கட்டப்பாடுகள் கடுமையாக்கப்படும்
விழாவில் அவர் பேசியதாவது:-
நேற்று (ஞாயிறு) இரவு பேசியதை நான் மீ்ண்டும் சரிபார்த்தேன். நான் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக கூறவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் மும்பையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், காங்கிரஸ் மந்திரி பாலாசாகிப் தோரட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல நேற்று முதல்-மந்திாி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் ரஜ்னோலி பாலத்தின் ஒரு பகுதி, பிவண்டி- கல்யாண் ரோட்டில் துர்காடி மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். இதேபோல ஆகாய வழிச்சாலை, சத்ரபதிசிவாஜி விமான நிலையம் டி-1, டி-2 இடையே வாகனங்கள் செல்ல சுரங்கபாதை திட்டத்திற்கான பூமி பூஜையையும் உத்தவ் தாக்கரே நடத்தி வைத்தார்.
Related Tags :
Next Story