ஒடிசாவில் இருந்து ரெயிலில் வந்த 90 டன் ஆக்சிஜன்
தேனி, திண்டுக்கல் உள்பட 6 மாவட்டங்களுக்கு ஒடிசாவில் இருந்து 90 டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தன
திண்டுக்கல்:
இந்தியாவில் உலா வரும் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த தொற்றால் நோயாளிகளின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கின்றனர்.
எனவே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் தென்மாவட்டங்களுக்கு தேவையான ஆக்சிஜன் ரெயில் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் தென்மாவட்டங்களுக்கு தேவையான 90.6 டன் ஆக்சிஜன், ஒடிசாவில் இருந்து ரெயிலில் மதுரைக்கு நேற்று வந்தது. இந்த ரெயில் மதுரை மாவட்டம் கூடல்நகர் குட்ஷெட்டில் நிறுத்தப்பட்டது.
இந்த ரெயிலில் 6 டேங்கர்களில் ஆக்சிஜன் வந்தது. இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திண்டுக்கல்லுக்கு 7 டன் ஆக்சிஜன் வந்தது.
Related Tags :
Next Story