கொரோனாவால் இறந்த இந்து பெண்ணின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்


கொரோனாவால் இறந்த இந்து பெண்ணின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்
x
தினத்தந்தி 1 Jun 2021 7:54 PM IST (Updated: 1 Jun 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே கொரோனாவால் இறந்த இந்து பெண்ணின் உடலை முஸ்லிம் இளைஞர்கள் அடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

கம்பம்:
கம்பம் அருகே ஆங்கூர்பாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துபோனார். 
இதையடுத்து அடக்கம் செய்வதற்காக அவரது உடல் ஆங்கூர்பாளையத்தில் உள்ள பொது மயானத்திற்கு கொண்டு கொண்டு வரப்பட்டது. 
ஆனால் ஆங்கூர்பாளையத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், அந்த பெண்ணின் உடலை அரசு வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய முன்வந்தனர். அந்த பெண் இந்து மதத்தை சேர்ந்தவர். 
இதனால் அவரது உடலை இந்து முறைப்படி முஸ்லிம் இளைஞர்கள் அடக்கம் செய்தனர். மதத்தை கடந்த மனிதநேயத்தை கடைபிடித்த இளைஞர்களின் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Next Story