போடியில் கொரோனா தடுப்பூசி முகாம்


போடியில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:20 PM IST (Updated: 1 Jun 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

போடியில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

போடி:
போடி அரசு மருத்துவமனையில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதார துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் போடியில் நேற்று முன்தினம் 4 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. 
அதன்படி, போடி ஜக்கநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் மண்டபத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் சுகாதார துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சண்முகசுந்தரபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில் ஏலக்காய் தொழிலாளர்கள் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
இதேபோல் போடி வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் போலீசாருக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. போடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மற்றொரு முகாமில் நகராட்சி பணியாளர்கள் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

Next Story