ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உறவினர்கள், கிராம மக்கள் திடீர் போராட்டம்
அரக்கோணம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் அரிகிலப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் அரிகிலப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்புக்கடிக்கான மருந்து இல்லை
அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி செல்வி (வயது 49). நேற்று முன்தினம் இரவு செல்வி தனது வீட்டுக்கு வெளியில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3.30 மணியளவில் செல்வியை பாம்பு கடித்தது. அவர், திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது, தன்னை பாம்பு கடித்து விட்டு ஓடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே செல்வி வலியால் கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தனர். செல்வியை உடனே மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரிகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பாம்புக்கடிக்கான மருந்து இருப்பு இல்லை, எனக் கூறப்படுகிறது.
முதலுதவி சிகிச்சை
இதையடுத்து அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள ஊழியர் ஒருவர் கூறினார். ஆனால் அவரை அரக்கோணத்துக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ, இரு சக்கர வாகன வசதி இல்லை எனத் தெரிகிறது. எனினும், சில மணி நேரத்துக்கு பின் கிராம மக்களின் உதவியோடு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு செல்வியை அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
தகவலை கேட்டு ஆத்திரம் அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் அரக்கோணம் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்ேப அரிகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், ெசல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம், எனக்கூறி அங்குள்ள டாக்டர்களிடம் ஆவேசமாகப் ேபசினர்.
திடீர் போராட்டம்
மேலும் உறவினர்களும், கிராம மக்களும் அரிகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரிகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், ெசல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.
உடனே மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தக்கோலம் போலீசார் அரிகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து வந்து, அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் மருத்துவத்துறை அதிகாரிகள், வருத்தம் தெரிவித்து, இனி இதுபோல் நடக்காது, எனத் தெரிவித்தனர். பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
---------
Related Tags :
Next Story