கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது


கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 9:33 PM IST (Updated: 1 Jun 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தியதாக மதுவிலக்கு போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தியதாக மதுவிலக்கு போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியவர்களை  போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை அருகே கீழ்வேளூர் செட்டி ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே  மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 4 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வலிவலம் செட்டி ஆலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (50) என்பதும் தெரிய வந்தது.இதுகுறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தி மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story