சாராய ஊறல்கள் அழிப்பு


சாராய ஊறல்கள் அழிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 10:36 PM IST (Updated: 1 Jun 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

சீா்காழி அருகே சாராய ஊறல்கள் மதுவிலக்கு ேபாலீசாரால் அழிக்கப்பட்டது.

சீர்காழி:
சீா்காழி அருகே சாராய ஊறல்கள் மதுவிலக்கு பாலீசாரால் அழிக்கப்பட்டது.
சாராய ஊறல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
அதன் அடிப்படையில் நேற்று மதுவிலக்கு  துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் தொடுவானம் கிராமத்திற்கு சென்று அங்கு வயல்வெளி பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்கு போடப்பட்டிருந்த ஊறல்களை கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்தனர்.
 இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழுதலைகுடி கிராமத்தை சேர்ந்த அன்னக்கிளி என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story