கூடலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
கூடலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் நகராட்சியில் 51 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் தொற்று பரவாமல் இருக்க நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியிடங்களில் நடமாடுவதை தடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மூலம் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று கூடலூர் புதிய பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 1-ம் மைல் கோக்கோகாடு உள்பட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story