சிதம்பரத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு


சிதம்பரத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 11:10 PM IST (Updated: 1 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டாா்.

சிதம்பரம், 

சிதம்பரம் விபிஷண புரம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவருடைய தாய் தனலட்சுமி (வயது 88). 

இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது அங்கு இருந்த 20 அடி ஆழ கிணற்றின் உள்ளே தனலட்சுமி தவறி விழுந்தார்.

இதில் சத்தம் கேட்ட அவரது மகன் கிருபாகரன், சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 அதன்பேரில்  நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் விழுந்த மூதாட்டியை ஏணி, கயிறுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டனர்.  20 அடி ஆழம் கொண்ட கிணற்றில், நான்கு அடியில் தண்ணீர் இருந்தது. .

 இதனால் தனலட்சுமி காயமின்றி உயிர் பிழைத்துள்ளார் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story