கடற்கரையில் சூதாடிய 8 பேர் கைது


கடற்கரையில் சூதாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 11:18 PM IST (Updated: 1 Jun 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கடற்கரையில் சூதாடிய 8 பேர் கைது

மணமேல்குடி, ஜூன்.2-
மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி முடுக்குவயல் கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முடுக்குவயல் கடற்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 8 பேரை சுற்றிவளைத்து பிடித்து மணமேல்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1,500-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story