சளி பாதிப்பு விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல், சளி பாதிப்பு விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று களப்பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல், சளி பாதிப்பு விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று களப்பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
வீடு, வீடாக ஆய்வு
திருப்பூர் மாநகரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வையிடும் வகையில் கண்காணிப்பு அதிகாரியாக நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் நியமிக்கப்பட்டு தடுப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக 100 வீடுகளுக்கு ஒருவர் வீதம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
களப்பணியாளர்களுக்கு அறிவுரை
இந்த பணிகளை நேற்று காலை கண்காணிப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருப்பூர் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பிச்சம்பாளையம் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வதை கலெக்டர் விஜயகார்த்திகேயன், கண்காணிப்பு அதிகாரி கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.
பின்னர் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து ஆய்வுக்கு செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் அது குறித்து விவரங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் டாக்டருக்கு தெரிவித்து அந்த பகுதிக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வார்கள். மேலும் தேவைப்படும்போது கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.
காய்ச்சல் கண்டறியும் முகாம்
களப்பணியாளர்கள் முழுவீச்சில் இந்த பணிகளில் ஈடுபடவேண்டும். ஒரு வாரத்துக்குள் கொரோனா பரவலை வெகுவாக தடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு மண்டல பகுதிகளில் காலை, மாலை காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் உதவி ஆணையாளர் செல்வநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story