தேன்கனிக்கோட்டையில் உழவர்சந்தை முன்திடீர் காய்கறி கடைகள் அகற்றம்
உழவர்சந்தை முன்திடீர் காய்கறி கடைகள் அகற்றம்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நகர் முழுவதும் நடமாடும் தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை முன்பாக திடீரென உருவான காய்கறி கடைகள் குறித்து தகவலறிந்த தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் லாரன்ஸ், துப்புரவு ஆய்வாளர் நடேசனுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து உடனடியாக சென்ற அவர் அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தினார். மேலும் வியாபாரிகள் ஊரடங்கு தளர்வுகள் அகற்றும் வரை, மறு உத்தரவு வரும் வரை கடைகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி சென்றார்.
Related Tags :
Next Story