அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கமுதி, ஜூன்.2-
கமுதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தடுப்பதற்காக தளர்வில்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிறு குழந்தைகளும் வீட்டிலேயே முடக்கி இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கமுதி பகுதிகளில் இரவும் பகலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு குழந் தைகள், பெரியவர்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மருத்துவமனையில் மின்தடை ஏற்படு வதால் நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் தவிக் கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தமிழக முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரி களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அறிவிக் கப்படாத மின்வெட்டு தொடர்ந்தால் மின்சார துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story