கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 11:44 PM IST (Updated: 1 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

மங்கலம்
மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர்-மோதிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி (வயது 53) விவசாயி. நேற்று காலை 11 மணிக்கு மனோன்மணி விவசாயப்பணி மேற்கோள்ள அவரது தோட்டத்தில் உள்ள கிணறு அருகே சென்றார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்த கிணற்றில்  புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இது பற்றி விவசாயி மனோன்மணி பல்லடம் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கும், திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான 4 வீரர்கள் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானை கயிறு மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். ஒரு மணிநேரம் போராடி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சரக பணியாளர் சிவமணியிடம், தீயணைப்புத்துறையினர் புள்ளிமானை ஒப்படைத்தனர்.அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து புள்ளிமானை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். அது ஆண்புள்ளிமான் என்பதும் புள்ளிமானுக்கு நான்கு வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story