மேய்ச்சல் நிலங்களில் செழித்து வளர்ந்துள்ள கொழுக்கட்டை புற்கள்
காங்கேயம் சுற்று பகுதிகளில் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.
காங்கேயம்
காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.
இதனால் கால்நடைகளுக்கு தீவனப் பிரச்சினை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் பச்சை அல்லாத காய வைக்கப்பட்ட வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனர். தற்போது மழை பெய்து மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் கால்நடைகளை மேய்ச்சல் நிலத்தில் மேய விட்டுவருகின்றனர்.
இதனால் தீவனப்பிரச்சினை தீர்ந்துள்ளது. இந்த கொழுக்கட்டை புற்களை கறவை மாடுகள் உண்பதால் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் அண்மையில் பரவலாக பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கிறது. இதனால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. வழக்கமாக 1 லிட்டர் பால் கொடுக்கும் மாடு தற்போது 4 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வரத்தும் அதிகரித்துள்ளது என்றனர்.
Related Tags :
Next Story