முழு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட நூற்பாலைக்கு சீல்
மடத்துக்குளம் அருகே முழு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட நூற்பாலைக்கு தாசில்தார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே முழு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட நூற்பாலைக்கு தாசில்தார் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
நூற்பாலை
மடத்துக்குளம் அருகே உள்ள வேடபட்டி ஊராட்சி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நூற்பாலைகள் இயங்கக் கூடாது என இப்பகுதியில் உள்ள அனைத்து நூற்பாலைகளின் உரிமையாளர்களுக்கும் முன்னறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் வேடபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் முழு ஊரடங்கு சமயத்தில் இயங்கிவரும் நூற்பாலைக்கு சென்றனர். அப்போது முழு ஊரடங்கு விதிமுறைகளை பொருட்படுத்தாமல், ஆட்களை வைத்து நூற்பாலை இயங்கி வந்ததை தாசில்தார் நேரில் கண்டறிந்தார்.
‘சீல்’ வைப்பு
இதனையடுத்து தமிழக அரசின் முழு ஊரடங்கு விதிகளை முறையாக கடைபிடிக்காமலும், அதனை மீறும் விதமாகவும், வழக்கம்போல் இயக்கி வந்த நூற்பாலையின் உரிமையாளரை கண்டித்தார். பின்னர் நூற்பாலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இதே போல் காரத்தொழுவு ஊராட்சி பகுதியில் கடந்த வாரம் முழு ஊரடங்கு சமயத்தில் திறந்திருந்த டீக்கடைக்கு, இதே போல் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Related Tags :
Next Story