சித்தராமையா காய்ச்சலால் அவதி
சித்தராமையா காய்ச்சலால் அவதி
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் 2 நாட்களில் பங்கேற்க திட்டமிட்டு இருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆயினும் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளாார்.
Related Tags :
Next Story