சமூக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு
தடுப்பூசிக்கு ரூ.700 பெற்றதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு:
பெங்களூரு கிரிநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு ரூ.900 வசூலிக்கப்படுவதாகவும், அவற்றில் ரூ.700, பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரவி சுப்பிரமணியாவுக்கு கொடுப்பதாகவும், சமூக ஆர்வலர் வெங்கடேசிடம், அங்கு பணியாற்றும் பெண் கூறி இருந்தார்.
இதுதொடா்பான ஆடியோ வெளியாகி இருந்தது. மேலும் ரவி சுப்பிரமணியா மீது போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மீது கிரிநகர் போலீஸ் நிலையத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் எம்.எல்.ஏ. மீதும், தங்களது மருத்துவமனை மீதும் தவறான குற்றச்சாட்டு கூறி வந்ததால், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மீது புகாா் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story