வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீ
வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பிடித்தது.
வத்திராயிருப்பு, ஜூன்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த வயல்களில் உள்ள வைக்கோல்களை விவசாயிகள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம், பேரையூர் செல்லும் சாலையில் உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முகம்மது என்பவர் வத்திராயிருப்பு மாவூத்து பகுதியில் உள்ள வைரம் என்பவரது வயலில் இருந்து வைக்கோல்களை வாங்கி அதை டிராக்டர் மூலம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள மின் வயரில் வைக்கோல் உரசியதால் தீ பிடித்தது. பின்னர் சுதாரித்துக் கொண்ட டிரைவர் வைக்கோல் அனைத்தையும் டிராக்டர் தொட்டியில் இருந்து இறக்கி விட்டதால் டிராக்டரில் தீ பிடிக்காமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வைக்கோல்கள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story