தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2021 6:59 PM GMT (Updated: 1 Jun 2021 6:59 PM GMT)

தியாகதுருகத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இந்த நிலையில் தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவா், அங்கிருந்த அதிகாரிகளிடம்,  கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகளை  அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
தொடர்ந்து தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தில் தனிமை         படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமை படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மேலும் கிருமிநாசினி தெளித்து முறையாக தூய்மைப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி 

இது தவிர தனிமை படுத்தப்பட்ட பகுதிக்குள் வெளிநபர் யாரேனும் செல்லாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.  வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி யாருக்கேனும் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலா் அருண், பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story