பனப்பட்டி கிராமத்தில் 7 மயில்கள் மர்மமான முறையில் சாவு
பனப்பட்டி கிராமத்தில் 7 மயில்கள் மர்மமான முறையில் சாவு
நெகமம்
நெகமம் அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சியை சேர்ந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி, கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.
அத்துடன் அந்த மயில்கள் எப்படி இறந்தது என்பதை கண்டறிய் உடற்கூறு ஆய்வுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த ஆய்வு வந்த பின்னர்தான் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவரும்.
2 ஆண் மயில்கள் உள்பட 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story