கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி


கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 2 Jun 2021 12:39 AM IST (Updated: 2 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறை சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 

கொரோனா சிகிச்சை மையம் 

மலைப்பிரதேசமான வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

அத்துடன் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்க வருவாய்த்துறையினருடன் போலீசாரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோன்று இங்குள்ள அரசு கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 32 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

யோகா பயிற்சி 

இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் தைரியத்துடனும், நல்ல மனஉறுதியுடன் இருப்பதுடன், ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

 இதற்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் கார்த்திகேஷ், அந்த மையத்துக்கு சென்று கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். 

அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். 

ஆக்சிஜன் அளவு 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த மையத்தில் லேசான அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 அவர்கள் புத்துணர்வுடன் இருக்க ஆக்சிஜன் அளவு அதிகரிக்க வேண்டும் என்பதால் யோகா பயிற்சி அளிக்கப் பட்டது. 

இதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி கொள்வதால் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடையலாம் என்றனர்.


Next Story