திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் பலி


திருவெறும்பூர் அருகே  சாலை விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2021 12:42 AM IST (Updated: 2 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஆயுத படை போலீசார் பரிதாபமாக இறந்தார்.

திருவெறும்பூர் அருகே 
சாலை விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஆயுத படை போலீசார் சிகிச்சைக்கு பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

திருச்சி பொன்மலைப்பட்டி சகாயமாதா பவன் காலனியை சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் ஜோஸ்வா அருள் (வயது 35). கடந்த 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் துவாக்குடி அருகே உள்ள புதுக்குடி பகுதியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அப்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிச்சென்றுள்ளார். பின்னர் நேற்று மதியம் மீண்டும் புதுக்குடி சோதனை சாவடிக்கு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். 

விபத்தில் சாவு

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தேவராயநேரி அருகே வந்த போது, உடல்நிலை சரியில்லாததால் திடீரென அவர் மயங்கினார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஜோஸ்வா அருளை அங்கிருந்தவர்கள மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

 பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story